மோட்டார் வாகனத் தொழிலாளர்கள் இன்று வேலைநிறுத்தம்..! பேருந்துகள் இயங்குமா?

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அளவில் மோட்டார் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். 

கோப்புப்படம்

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆகஸ்ட் 7-ம் தேதி மோட்டார் தொழிலாளர்கள், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடுமா என கேள்வி எழுந்துள்ளது. இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து தரப்பட்ட வாகன ஓட்டுநர்களும் பங்கேற்பார்கள். மாநிலங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், லாரிகள், ஆட்டோக்கள், பழுது பார்க்கும் ஒர்க் ஷாப், டிரைவிங் ஸ்கூல், உதிரிபாக விற்பனைக் கடைகள் உரிமையாளர்கள் உட்பட லட்சக்கணக்கானோர் திரளாக பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்டத் தலைநகரங்களில் சாலை மறியல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!