வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (07/08/2018)

கடைசி தொடர்பு:05:35 (10/08/2018)

50 ரூபாயில் ஆரம்பித்தது இன்று 650 கோடி ரூபாய் நிறுவனம்! - நீங்களும் அப்படி ஜெயிக்கலாம்! #MotivationStory

கோவையில் வரும் ஆகஸ்ட் 18, 19-ம் தேதிகளில் ஃபைனான்ஸ் அண்ட் பிசினஸ் கான்க்ளேவ் கருத்தரங்கை நாணயம் விகடன் நடத்துகிறது. இந்தக் கருத்தரங்கில் ஃபைனான்ஸ் மற்றும் பிசினஸ் துறை சார்ந்த பல்வேறு நிபுணர்கள் கலந்துகொண்டு 'விஷன் 2025' என்ற தொலைநோக்குப் பார்வையுடன் தங்களது கருத்துகளை பகிர்கிறார்கள்.

கான்க்ளேவ்

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஆரஞ்ச்ஸ்கேப் நிறுவனர் சுரேஷ் சம்பந்தம். 
இவரைப் பற்றிய சிறுகுறிப்பு:

கடலூரைச் சேர்ந்த சுரேஷ் சம்பந்தம், மூன்று சகோதரர்களில் மூத்தவர். 1990-ல் ப்ளஸ் டூ முடித்துவிட்டு மருத்துவக் கல்லூரியில் சேர நினைத்தபோது, 5,00,000 ரூபாய் தேவைப்பட்டது. குடும்பத்தில் அனைவரையும் அமரவைத்து, குடும்பச்சூழலை விளக்கினார் அப்பா. `சுரேஷைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைத்தால், அவன் ஐந்து வருடங்கள் படித்த பிறகுதான் சம்பாதிக்க முடியும்’ என்றார். அப்பாவின் ரியல் எஸ்டேட் தொழிலில் சில லட்சம் ரூபாய், வழக்கு போன்ற விஷயங்களால் முடங்கிக் கிடந்தது. அதில் இறங்கிப் பிரச்னைகளைச் சரிசெய்தால், குடும்பத்தைச் சமாளிக்க முடியும். 17 வயது சுரேஷ், இரண்டாவது சாய்ஸைத் தேர்ந்தெடுத்தார். அந்தச் சின்ன வயதில் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், போலீஸ் ஸ்டேஷன், நீதிமன்றம் என அலைந்தது சுரேஷுக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. கூடவே கடலூரில் இருந்த `வேல்முருகன் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்’டில் தட்டச்சு பயிலச் சேர்ந்தார். கொஞ்ச நாளில் அங்கே ஒரு கம்ப்யூட்டர் வந்தது. ``டைப்ரைட்டிங் 30 ரூவா... கம்ப்யூட்டர் கத்துக்க 50 ரூவா” என்று வேல்முருகன் சொன்னதும், கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஆசை அவரை உள்ளிழுத்துக்கொண்டது. கற்றுக்கொடுக்க மாஸ்டர் யாரும் இல்லாமல், சுயம்புவாகக் கணினியில் தானே கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். இன்றைக்கு 650 கோடி ரூபாய் மதிப்புள்ள `ஆரஞ்ச்ஸ்கேப்’ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனராக இருக்கும் சுரேஷ் சம்பந்தத்தின் பயணம், அப்படி 50 ரூபாயில் ஆரம்பித்ததுதான்.

 `ஆரஞ்ச்ஸ்கேப்’ நிறுவனத்துக்கான விதை விழுந்தது முதல் இப்போது அதன் வளர்ச்சி வரை தனது வெற்றியின் ரகசியத்தை நாணயம் விகடனின் கோவை கருத்தரங்கில் பகிர்ந்து கொள்ளவிருக்கிறார் சுரேஷ் சம்பந்தம். 'கடலூரிலிருந்து கலிபோர்னியா வரை - என் வர்த்தகப் பயணம்' என்ற தலைப்பில் அமையவிருக்கும் அந்த உரை, ஒரு தொழில் முனைவோராக வரவிரும்பும் அனைவருக்குமான ஊக்கமத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். உழைக்கத் தயாராக இருக்கும் நீங்கள், ஜெயிப்பதற்கு எது இடைஞ்சலாக இருக்கிறது என்பதை அங்கே உணரலாம்.

நிர்ணயிக்கப்பட்ட இருக்கைகளே உள்ள அந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள கீழே இருக்கும் இணைப்பில் முன்பதிவு செய்து கொள்ளுங்கள்..!

கான்க்ளேவ் முன் பதிவு செய்ய  http://bit.ly/nvconclave