பிரதமர் மோடி எப்போது சென்னை வருகிறார்?

முன்னாள் முதல்வர் கருணாநிதி உடல்நிலை ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக காவேரி மருத்துவனை தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், தரைவழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்றைய தினம் இரவு கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிய காவேரி மருத்துவமனைக்கு நேரில் வந்தார். தி.மு.க-வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.

மோடி

இதேநேரத்தில், மூன்று ஹெலிகாப்டர்கள் தாம்பரத்தில் உள்ள கடற்படை தளத்திலிருந்து சென்னை விமானநிலையத்துக்கு வந்தன. அவை தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இன்று காலை பிரதமர் சென்னை விசிட் வருகிறார் என்கிற செய்தி அதிகாரிகள் மத்தியில் பேசப்பட்டது. இதற்கிடையில், காவேரி மருத்துவமனை அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து 24 மணி நேரம் கெடு அறிவித்தனர். இந்தத் தகவல் பிரதமருக்கு தெரிவிக்கப்பட்டதாம். அதையடுத்து, 'கெடு முடியும்போது மருத்துவமனை தரப்பில் என்ன சொல்கிறார்கள்? என்பதைப் பார்த்துவிட்டு நான் வருகிறேன்' என்று சொல்லிவிட்டாராம். ஆக, பிரதமரின் சென்னை விசிட் இன்று மாலை நேரத்துக்குப் பிறகே முடிவாகும் எனத் தெரிகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!