சிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இடைக்காலத் தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி | chennai HC ban to idol theft case given to cbi

வெளியிடப்பட்ட நேரம்: 12:28 (07/08/2018)

கடைசி தொடர்பு:12:28 (07/08/2018)

சிலைக் கடத்தல் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இடைக்காலத் தடை- சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் விசாரித்து வந்த சிலைக் கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றிய அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

சிலை கடத்தல்

ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் தலைமையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சிலைக் கடத்தல் வழக்குகளையும் விசாரிக்க சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு என்ற குழுவை அமைத்து கடந்த 2017-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் குழு கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் 250 கோடி ரூபாய் மதிப்பிலான பல சிலைகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ-க்கு மாற்றி அரசாணை பிறப்பித்தது தமிழக அரசு. அரசின் இந்த அரசாணைக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், தமிழக அரசின் இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. 

அப்போது அரசின் தரப்பில் ஆஜரான கூடுதல் சிறப்பு நீதிபதி கூறும்போது, ``தமிழக அரசின் அரசாணை, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இல்லை. முன்னதாக கும்பகோணம் நீதிமன்றத்தில் சிலைக் கடத்தல் தொடர்பாக நிலுவையிலுள்ள அனைத்து வழக்குகளையும் ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்வார். சிலைக் கடத்தல் தொடர்பான புதிய வழக்குகளை மட்டும் சி.பி.ஐ விசாரிக்கட்டும் என்றே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில் தவறு ஒன்றும் இல்லை. இது அரசின் கொள்கை முடிவு'' எனக் கூறினார். பின்னர் அரசாணை பிறப்பிக்கப்பட்டது தொடர்பான முழு விவரத்தையும் நீதிபதிகள் கேட்டறிந்தனர். தொடர்ந்து இந்த அரசாணை நீதிமன்ற உத்தரவுக்கு எதிராகத்தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இதை இன்னொரு ஒரு நிமிடம்கூட நீடிக்க விடமாட்டோம் எனக் கூறி தமிழக அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டனர். 


[X] Close

[X] Close