வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (07/08/2018)

கடைசி தொடர்பு:07:52 (08/08/2018)

LIVE: கருணாநிதி மறைந்தார் - கண்ணீரில் தமிழகம்! #Karunanidhi

LIVE: கருணாநிதி மறைந்தார் - கண்ணீரில் தமிழகம்! #Karunanidhi

Karunanidhi Health Updates:

கருணாநிதி காலமானார் :

தி.மு.க. தலைவர் கருணாநிதி மிகவும் கவலைக்கிடமாக கடந்த சில தினங்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

dmk cadres

கோபாலபுரம் இல்லத்தில் குவியும் தொண்டர்கள் :

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமானதையடுத்து, கருணாநிதியின் உறவினர்கள் கண்ணீருடன் கோபாலபுரம் வந்தடைந்தனர். இதைத்தொடர்ந்து தொண்டர்களும் கோபாலபுரம் இல்லத்தில் குவியத்துவங்கியிருக்கிறார்கள். கருணாநிதியின் உறவினர்கள் அடுத்தடுத்து கோபாலபுரம் வரத்துவங்கியத்தையடுத்து, கண்ணீர் மல்க கோபாலபுரத்தில் திரள்கிறார்கள் தி.மு.க. தொண்டர்கள்.

அரசு நிகழ்ச்சிகள் ரத்தாகிறது :

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள நிலையில், தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடக்கவிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் நடக்கவிருந்த நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாக வெளியான தகவலை அடுத்து, அவரது குடும்பத்தினர் கண்ணீருடன் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்பத்தினர் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்தனர். 

கருணாநிதி குடும்பத்தார்

*தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை மாலை 6 மணியுடன் மூட  உத்தரவிடப்பட்டுள்ளது.

*கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடம் என காவேரி மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, அங்கு கூடியிருக்கும் தொண்டர்கள் பலர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.

தொண்டர்கள் அழுகை

*காவேரி மருத்துமனை தரப்பில் அறிக்கை வெளியானதையடுத்து, தி.மு.க தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து   காவேரி மருத்துவமனைக்குள் இனி வெளியிலிருந்து வரும் யாருக்கும் அனுமதியில்லை என போலீஸார் அறிவித்துள்ளனர்.

*தி.மு.க தலைவர் கருணாநிதியின் உறவினர்கள் அனைவரும் காவேரி மருத்துவமனைக்கு வந்தவண்ணம் உள்ளனர். துரைமுருகன் கண்ணீருடன் காவேரி மருத்துவமனைக்குள் வந்தார். 

*கருணாநிதி உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

*தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் டிஜிபி ராஜேந்திரன் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

*சென்னை முழுவதும் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெரினாவில் தற்போது போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா

*வெளிமாவட்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சென்னை வர டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பை அதிகரிக்க டி.ஜி.பி. அறிவுறுத்தி, காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

டிஜிபி உத்தரவு

*சற்றுமுன் மு.க.ஸ்டாலின் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துச் சென்ற நிலையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் முதல்வர் ஆலோசனை நடத்த உள்ளார். 

*`தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு என் பிரார்த்தனைகள்’ என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தி.மு.க தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இதைப் பதிவிட்டுள்ளார்.

வேலுமணி

*காவேரி மருத்துவமனை வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிப்பு. 

காவேரி மருத்துவமனை

*முதல்வரை சந்தித்துவிட்டு மீண்டும் காவேரி மருத்துவமனை வந்த மு.க.ஸ்டாலின், தி.மு.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 

அதிரடி படையினர்

*காவேரி மருத்துவமனையில் அதிரடிப் படை குவிக்கப்பட்டுள்ளது.

karunanidhi , DMK cadres

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசிவருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுவருகிறது. கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, எடப்பாடியை ஸ்டாலின் சந்தித்   துள்ளார். அவருடன் மு.க.அழகிரி, கனிமொழி, டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் உள்ளனர்.

karunanidhi, dmk cadres
 

காவேரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலத்தில் நேற்று பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. `வயது முதிர்வின் காரணமாக தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல் உறுப்புகளைச் செயல்படவைப்பது சவாலாக உள்ளது. அவரின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது; தொடர்ந்து அவர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவருகிறார். கருணாநிதிக்கு அளிக்கப்பட்டுள்ள சிகிச்சைக்கு, அவரின் உடல்நிலை ஒத்துழைப்பது குறித்து அடுத்த 24 மணிநேரத்துக்குப் பிறகு தெரியவரும்’ என மருத்துவமனை நிர்வாகம் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், நேற்று மாலையிலிருந்தே தி.மு.க தொண்டர்கள் காவேரி மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கிவிட்டனர். 

cadres
 

இன்று காலை முதல் காவேரி மருத்துவமனை வளாகம் பரபரப்பாகக் காணப்படுகிறது. அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க மூத்த நிர்வாகிகள் காவேரி மருத்துவமனைக்கு வந்துவிட்டனர். அவர்களுடன் இன்று காலை ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து, தற்போது மு.க.அழகிரி மற்றும் மு.க.ஸ்டாலின், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசி வருகின்றனர். இந்தச் சந்திப்பு, தொண்டர்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. காவேரி மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் கதறி அழும் காட்சிகளைப் பார்க்க முடிகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க