`அழகிரி எங்கே..?'- ஸ்டாலினிடம் விசாரித்த மோடி 

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு பிரதமர் மோடி இன்று வந்தார். அப்போது அவர், ஸ்டாலினிடம், அழகிரி எங்கே என்று கேட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மோடி

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, உடல்நலக்குறைவால் மரணமடைந்ததையடுத்து, அவரின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள், பொதுமக்கள், தி.மு.க தொண்டர்கள் என ஏராளமானவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவருகின்றனர். இதனால் ராஜாஜி ஹாலில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகின்றன.    கருணாநிதியின் உடல் அருகே அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள் நிற்கின்றனர்.

|அஞ்சலி செலுத்த வருபவர்கள் ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் துக்கம் விசாரித்துச் செல்கின்றனர். ஆனால், அவ்வப்போது அழகிரியைப் பார்க்க முடிவதில்லை. இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த காலை 10.30 மணியளவில் ராஜாஜி ஹாலுக்கு வந்தார். ஸ்டாலினிடமும் கனிமொழியிடமும் துக்கம் விசாரித்தார் மோடி. கனிமொழியின் தலையில் கைவைத்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து ஸ்டாலினுக்கும் ஆறுதல் சொல்லியவர் அப்போது, `அழகிரி எங்கே’ என்று விசாரித்தாராம். அதிக நேரம் நிற்பதாலும் சில அசெளகரியங்களாலும் ராஜாஜி ஹாலின் பின்பகுதியில் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் எனச் சொல்லியிருக்கிறார் ஸ்டாலின். ஆமோதிப்பதாக தலையசைத்தபடி விடை பெற்றிருக்கிறார் மோடி. இறுதி அஞ்சலி செலுத்தவரும் பிற பிரமுகர்கள் அழகிரியையும் சந்தித்துவிட்டுதான் செல்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!