வெளியானது கருணாநிதியின் இறப்புச் சான்றிதழ்! | karunanidhi death certificate filed in chennai corporation

வெளியிடப்பட்ட நேரம்: 10:26 (09/08/2018)

கடைசி தொடர்பு:10:49 (09/08/2018)

வெளியானது கருணாநிதியின் இறப்புச் சான்றிதழ்!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் இறப்புச் சான்றிதழ் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது. 

கருணாநிதி

தி.மு.க தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக  சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த 7-ம் தேதி மாலை 6:10 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரின் உடல் நேற்று மாலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணாவில் நினைவிடத்துக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது. 

கருணாநிதியின் இறப்பு இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி, பல மாநில முதல்வர்கள், ஆளுநர்கள், இந்தியாவின் பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகத்தினர், லட்சக்கணக்கான தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். கருணாநிதியின் உடலை அண்ணா நினைவிடம் அருகில் அடக்கம் செய்வதற்கு அனுமதி மறுத்த தமிழக அரசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டு அதில் வெற்றி பெற்ற பிறகே அவர் அடக்கம் செய்யப்பட்டார். இந்தச் செய்தியைக் கேட்டு ஸ்டாலின் உணர்ச்சிவசத்தில் அழுத காட்சி தொண்டர்களை பெரும் சோகத்துக்குள்ளாக்கியது. வழக்கில் வெற்றி, ஸ்டாலின், அழகிரியின் அழுகை, தொண்டர்களின் அழுகுரல் கோஷங்கள் போன்ற நெகிழ்ச்சிகரமான சம்பவங்களுக்கு நடுவே கருணாநிதி அடக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில், கருணாநிதியின் இறப்புச் சான்றிதழ் சென்னை மாநகராட்சியில் பதிவாகி தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவரின் பெயர், தாய், தந்தை மற்றும் மனைவியின் பெயர். இறந்த நாள், இறந்த இடம், வீட்டுமுகவரி ஆகியன பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கருணாநிதி இறப்பு சான்றிதழ்