”தலைவர் கலைஞர்னா சும்மாவா..!’’ காவேரி மருத்துவமனையைக் கலக்கிய பாகுபலி தருணம்

கருணாநிதி காவிரி மருத்துவமனை

தி.மு.க தலைவர் கருணாநிதி, உடல்நிலைக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். வெளியில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கூடியிருந்தார்கள். எல்லோரின் கண்களும் கவனமும் காவேரி மருத்துவமனையில் வாயிலை நோக்கியே இருந்தது. எப்போது அடுத்த அறிவிப்பு வரும், தலைவர் வீட்டுக்கு எப்போது திரும்புவார், அறிவாலயத்துக்கு வருவாரா எனப் பல சந்தேகங்கள் அவர்களுக்கு. 

அப்போதுதான், அந்த இளைஞர் கூட்டம் எதிரில் இருக்கும் மேம்பாலத்தின்மீது ஏறியது. அங்கிருக்கும் காவலர்கள், அவர்கள் கைகளில் இருந்த நீளமான பெரிய பொருள் ஒன்றைக் கண்டு பரபரப்பானார்கள். இளைஞர்கள் பதற்றப்படாமல் விஷயத்தை காவலருக்கு விளக்கிக் கூறினார்கள். காவலர்களும் பெரிதாய் எதிர்ப்புக் காட்டவில்லை. இளைஞர்கள் வேலையைத் தொடங்கினார்கள். அப்போது, மொத்தக் கூட்டமும் இவர்களுக்கு முதுகைத்தான் காட்டிக்கொண்டிருந்தது. இளைஞர்கள் கொண்டுவந்த கருணாநிதியின் மிகப்பெரிய ஃப்ளெக்ஸை மேம்பாலத்தின் மேலிருந்து தொங்கவிட்டார்கள்.

“டேய் தலைவர்டா...” என முதல் குரல் கேட்டது.  கூட்டத்தின் அத்தனை தலைகளும் இப்போது மேம்பாலத்தின் பக்கம் திரும்பின. அவ்வளவு பெரிய பேனரில் தலைவரைக் கண்டதும் பலரின் கண்கள் கசிந்தன. கோஷங்கள் விண்ணை முட்டின.

 

 

 

“செம மாஸ் இல்ல...” என இளைஞர்கள் பேசிக்கொண்டது நம் காதிலும் கேட்டது.

”எத்தனை தலைமுறைகளைத் தாண்டி ஆண்டிருக்கிறார் இந்த மனுஷன்” எனப் பெரியவர்கள் பேசியதும் கேட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!