`5,000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம்' -  அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

அங்கீகாரம் இல்லாத 5,000 தனியார் பள்ளிகளுக்குத் தற்காலிக அங்கீகாரம் அளித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழக அரசு

தமிழக அரசின் 2018-19-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, தற்போது அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள அரசாணையில், ``ஏற்கெனவே 5 உயர் நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, தற்போது 95 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்த அனுமதி அளிக்கப்படுகிறது. மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் பள்ளிகளுக்கு, தலைமையாசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் வழங்கப்படும். மேலும், தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். இதேபோல, 100 நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அரசாணையில், அங்கீகாரம் இல்லாத 5000 தனியார் பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் அளித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!