கருணாநிதி நினைவிடத்தில் குடும்ப உறுப்பினர்கள் மலர் அஞ்சலி..!

மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் ஸ்டாலின் உட்பட குடும்ப உறுப்பினர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். 

நினைவிடம்

வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தி.மு.க தலைவர் கருணாநிதி, நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். பின்னர் சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உடலுக்கு அரசியல் மற்றும் திரைப் பிரபலங்கள் மட்டுமல்லாது, லட்சக்கணக்கான பொதுமக்களும் நேரில் அஞ்சலிசெலுத்தினர். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே கருணாநிதியின் உடல், ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள அவரது நினைவிடத்துக்குச் சென்று பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதேபோல் இன்று காலை மு.க. ஸ்டாலின் உட்பட கட்சி நிர்வாகிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் இன்று மாலை கருணாநிதியின் குடும்பத்தினர் அனைவரும் அவரின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். ஸ்டாலின், அழகிரி, செல்வி, தமிழரசு, கனிமொழி, ராஜாத்தியம்மாள், உதயநிதி, அருள்நிதி உட்பட குடும்பத்தினர் அனைவரும் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். அப்போது பெய்த மழையை பொருட்படுத்தாமல், கொட்டும் மழையில் அவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!