வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (10/08/2018)

கடைசி தொடர்பு:16:40 (10/08/2018)

தடையை மீறி செயல்பட்ட பாலிதீன் நிறுவனத்துக்கு ’சீல்’!- புதுச்சேரி அமைச்சர் அதிரடி

தடையை மீறி செயல்பட்ட பாலிதீன் நிறுவனத்துக்கு அதிகாரிகள் மூலம் ’சீல்’ வைத்திருக்கிறார் புதுச்சேரி அமைச்சர் கந்தசாமி.

பாலிதீன்

``புதுச்சேரியில் பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமையைக் கருத்தில் கொண்டு 50 மைக்ரானுக்கு கீழ் உள்ள பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும்” என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அறிவித்திருந்தார் சுற்றுச்சூழல் அமைச்சர் கந்தசாமி. அதுகுறித்து சட்டப்பேரவையிலும் அறிவித்த அவர், கடந்த சில தினங்களுக்கு முன் புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள பிளாஸ்டிக் விற்பனை கடைகளில் திடீரென ஆய்வு மேற்கொண்டு 50 மைக்ரானுக்கு கீழ் தயாரிக்கப்பட்ட 100 கிலோ பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகளுடன் சென்று பறிமுதல் செய்தார். மேலும், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

அமைச்சர் கந்த்சாமி

தொடர்ந்து மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் கந்தசாமி, தொழிற்சாலைக்கான உரிமம் இல்லாமலும், அரசு உத்தரவை மீறி 50 மைக்ரான் கீழ் பாலீதின் தயாரித்த ஸ்டாண்டர்டு பாலிதீன் (STANDARD POLIMERS) என்ற நிறுவனத்துக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதேபோல 50 மைக்ரானுக்கு கீழ் உற்பத்தி செய்யப்பட்ட சப்தகிரி என்ற மற்றொரு தனியார் பாலீதீன் நிறுவனத்தில்  50 கிலோ பாலீதின் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கந்தசாமி, ``துறைச் செயலர்கள் தலைமையில் பறக்கும் படை அமைத்து அனைத்துப் பிளாஸ்டிக் தொழிற்சாலைகளும் கண்காணிக்கப்படும். அரசு உத்தரவை மீறி தொடர்ந்து செயல்படும் பிளாஸ்டிக் பாலீதீன் தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்படும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க