`விசாரணை செய்யலாம்; சிறையில் அடைக்க மாட்டேன்' - திருமுருகன் காந்தி விவகாரத்தில் நீதிபதி கோபம் 

``திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது'' எனத் தமிழக போலீஸின் கோரிக்கையை சைதாப்பேட்டை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழகத்தின் முக்கியப் பிரச்னைகளான ஸ்டெர்லைட் ஆலை விவகாரம், அதன் தொடர்ச்சியாக நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, சேலம்-சென்னை எட்டு வழிச் சாலை தொடர்பானவற்றைச் சர்வதேச அளவில் தொடர்ந்து எடுத்துரைத்துவருகிறார். அந்த வகையில், இந்த விவகாரங்கள் தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் சமீபத்தில் திருமுருகன் காந்தி பேசினார். இதைத் தொடர்ந்து, நார்வேயிலிருந்து நேற்று அதிகாலை பெங்களூரு விமான நிலையம் வந்த அவரைத் தடுத்த காவலர்கள், லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளதாகக் கூறி, விமான நிலையத்தில் அவரைக் கைதுசெய்தனர். கைதுகுறித்து கேள்வி எழுப்பியதற்கு, திருமுருகன் காந்திக்கு எதிராகத் தேசத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதைக் காரணம் காட்டினர். இதற்கிடையே, பெங்களூரு விரைந்த தமிழக போலீஸ், திருமுருகன் காந்தியை இன்று சென்னை கொண்டுவந்தனர். 

பிறகு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவரை நீதிமன்றக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மறுப்பு தெரிவித்த சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி பிரகாஷ், ``எதன் அடிப்படையில் அவர்மீது தேசத் துரோக வழக்கு பதிவுசெய்துள்ளீர்கள்? இதுகுறித்து எழுத்துபூர்வ பதில் மனு அளிக்க வேண்டும். மேலும், திருமுருகன் காந்தி மீது பதியப்பட்டுள்ள வழக்கில் அடிப்படை முகாந்திரம் இல்லாததால், அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட முடியாது. வேண்டுமானால், சென்னை சைபர் கிரைம் போலீஸின் விசாரணை அதிகாரி 24 மணி நேரம் அவரிடம் விசாரணை நடத்தலாம்" எனக் காட்டமாகத் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!