கொல்லைப்புறம் வழியாக ஸ்டெர்லைட்டைத் திறக்க தமிழக அரசு முயற்சி – வாசுகி குற்றச்சாட்டு!

”ஸ்டெர்லைட் ஆலையை ஒருபுறம் அரசாணை வெளியிட்டு மூடுவது, மறுபுறம் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையாக வாதங்களை எடுத்து வைக்காமல் படிப்படியாக தமிழக அரசு கொல்லைப்புறம் வழியாக அனுமதிக்க முயற்சிக்கிறது.” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி குற்றம் சாட்டி உள்ளார்.

”ஸ்டெர்லைட் ஆலையை ஒருபுறம் அரசாணை வெளியிட்டு மூடுவது, மறுபுறம் பசுமைத் தீர்ப்பாயத்தில் முறையாக வாதங்களை எடுத்து வைக்காமல் படிப்படியாக கொல்லைப்புறம் வழியாக தமிழக அரசு அனுமதிக்க முயற்சிக்கிறது” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி குற்றம் சாட்டி உள்ளார்.

துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மத்தியில் பா.ஜ..க ஆட்சிக்கு வந்த பின்னர் 2015-ல் சிறுதொழில் பட்டியலில் இருந்து தீப்பெட்டியை நீக்கினார். ஜி.எஸ்.டி.,யில் 18 % வரி விதிப்பால், தீப்பெட்டி சிறு உற்பத்தியாளர்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் தொழிற்சாலையையே மூடிவிட்டனர். இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பது என்பது மோடி அரசின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், உயர் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, ஆகியவற்றால் ஏராளமான சிறு, குறு, நடுத்தர தொழில்களை மூட வைத்துள்ளது.

தமிழக அரசு சட்டமன்றத்தில், அவர்களது கொள்கைக் குறிப்பை முன் வைத்தபோது, கடந்த ஓராண்டில் 50 ஆயிரம் சிறு, குறு, நடுத்தர தொழில் மூடப்பட்டிருக்கிறது. சுமார் 5 லட்சம் தொழிலாளிகள் வேலை இழந்துள்ளனர் என அரசே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது. மோடி அரசு கூறி வாக்குறுதிக்கு நேர்மாறாக, ஜி.எஸ்.டி வந்த பின்னர் இருக்கும் வேலைவாய்ப்பு பறிபோகும் அவல நிலை உருவாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் தீப்பெட்டித் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

கோவில்பட்டி,  2வது குடிநீர் திட்டத்தின் பணிகள் முழுவதுமாக முடிவடையாமல், தமிழக முதல்வர் அதை திறந்து வைத்தார். அப்போது தினமும் கோவில்பட்டி மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும் என வாக்குறுதி அளித்தார். இப்போதும் கோவில்பட்டியில், சில பகுதிகளில், 4 நாட்களுக்கு ஒரு முறையும், சில பகுதிகளுக்கு, 17 நாட்களுக்கு ஒரு முறையும் குடிநீர் வழங்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேறாமல் ஏன் அதை திறந்து வைக்க வேண்டும்?  தமிழகத்தில் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

அரசின் கொள்கை முடிவை யாரும் விமர்சிக்க கூடாது. கொள்கை முடிவுகளை எதிர்த்துப் பேசவோ, துண்டு பிரசுரம் விநியோகிக்கவோ, நடைபயணம் மேற்கொள்ளவோ கூடாது என்பதே அரசு மற்றும் காவல்துறையின் நிலைப்பாடாக உள்ளது. இப்படி எந்தச் சட்டத்தில் உள்ளது. இதைக் கூறுவதற்கு தமிழக அரசுக்கோ, காவல்துறைக்கோ எந்தவித உரிமையும் கிடையாது. ஸ்டெர்லைட்  ஆலை பிரச்சினையில், இதுவரை எந்தவொரு போலீஸ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போது பசுமைத் தீர்ப்பாயமும், ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகளை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. இதற்கு தமிழக அரசின் செயல்படாத தன்மை தான் முழுக்காரணம்.

ஒருபுறம் அரசாணை போட்டு ஆலையை மூடுவது,  மறுபுறம் தீர்ப்பாயத்தில் முறையாக வாதங்களை எடுத்து வைக்காமல் படிப்படியாக ஸ்டெர்லைட் ஆலையை முழுமையாக திறக்கும் ஏற்பாட்டை கொல்லைப்புறம் வழியாக செய்வது. இதை நோக்கி தான் தமிழக அரசு செல்கிறதோ என்ற அச்சமும், சந்தேகமும்  எழுந்துள்ளது' என கூறினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!