காட்டிக்கொடுத்தவரின் பசுமாடு, கன்றுக்குட்டியை வெட்டிக் கொன்ற கஞ்சா கடத்தல் கும்பல்!

சிவகங்கையில் கஞ்சா வியாபாரத்தைப் போலீஸாரிடம் காட்டிக்கொடுத்தவரின் பசுமாட்டை கஞ்சா கும்பல் வெட்டிக் கொன்றுள்ளனர். 

சிவகங்கை, சுண்ணாம்பு காளவாசல் பகுதியில் கஞ்சா, திருட்டுக் கும்பல் வெளிமாவட்டங்களிலிருந்து வந்தும் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாகப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்த நபரை கொலைமிரட்டல் விடுத்து, அவருடைய பசுமாட்டை வாள், கத்தியால் குத்தியதால் கன்றுக்குட்டி ஒன்று சம்பவ இடத்திலேயே இறந்துபோனது. அதில் ஒரு பசுமாடு சிகிச்சை பெற்றுவருகிறது.

7-ம் தேதி இரவு ஒரு மணியளவில் ஆறுமுகம் என்பவரது வீட்டிலிருந்த இரண்டு பசுமாடு, கன்றுக்குட்டி ஆகிய வாயில்லாத ஜீவன்களை வாள், அரிவாள் இவற்றால் வெட்டினார்கள். தடுக்க சென்ற ஆறுமுகம், அவருடைய மனைவியையும், `டேய் இவங்கதாண்டா போலீஸுக்குத் தகவல் சொன்னவர்கள்’ என்று சொல்லி அவர்களைக் கொலை செய்யும் நோக்கத்தோடு் ஓடிவந்தார்கள். அவர்களிடமிருந்து  ஆறுமுகமும் அவருடைய மனைவியும் தப்பித்துச் சென்றனர்.

இது சம்பந்தமாக நகரக் காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுக்கப்பட்டதும் போலீஸார் வந்து  அஜித்குமார், சோனை, செல்லப்பாண்டி, விஜய், மாரி, சக்கரை, நாகராஜ் உள்ளிட்ட ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!