`பனை மரம் அழிந்தால் மனித இனமே அழிந்துபோகும்!' - பிறந்தநாளை வித்தியாசமாகக் கொண்டாடும் திருமாவளவன்

சென்னை மாதவரம் பகுதியில் வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் பனை மர விதைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். 

திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், வரும் 17-ம் தேதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பனை மரக்கன்றுகளை நடுவதற்கு அக்கட்சி திட்டமிட்டமிட்டுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய வி.சி.க பிரமுகர், ``தமிழகம் முழுவதும் உள்ள எங்கள் 90 மாவட்டச் செயலாளர்களும் பனை விதைகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். `பனை மரம் அழிந்தால் மனித இனமே அழிந்துபோகும்' என்ற முழக்கத்தை முன்வைத்து பனை விதைகளைச் சேகரிக்கும் பணியில் துரிதமாக ஈடுபட்டுள்ளோம். பனை விதை கிடைக்காதபட்சத்தில் தனியார் அமைப்புகள் மூலம் விதைகள் பெறப்பட்டு மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். இந்த மாதத்துக்குள் ஒரு லட்சம் பனை மரங்கன்றுகள் நடப்படும்" என்றார். 

இதற்கிடையே, இத்திட்டத்தின் ஒரு பகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை மாதவரம் பகுதியில் பனை மர விதைகள் சேகரிப்பில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகளுடன் சுமார் ஒரு மணி நேரம் அவர் இந்தப் பணியில் ஈடுபட்டார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!