சதுரகிரி மலைக் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு துணிப்பைகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர்கள்..!

சதுரகிரி வந்த பக்தர்களுக்கு ஐம்பதாயிரம் துணிப்பைகளைக் கொடுத்து விழிப்புணர்வை ஏற்ப்படுத்தினார் மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ். 

வீரராகவராவ்

மதுரை மற்றும் விருதுநகர் எல்லைக்குள் சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தரமகாலிங்கம் சாமி கோயில் ஆடி அமாவாசை திருவிழாவுக்கு கடந்த சில நாட்களாக தமிழகம் மட்டுமில்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்தனர். வனத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு செல்வதற்கு விதிகள் அதிகம். இந்த நிலையில் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை இரண்டு மாவட்ட நிர்வாகமும் செய்திருந்தனர். இந்த முறை சிறப்பு அதிரடிப்படை போலிசாரும் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

நேற்று சதுரகிரி மலைக்கு நேரில் சென்ற மதுரை ஆட்சியர் வீரராகவராவ், பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்யப்பட்டிருந்த அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார். அதுமட்டுமில்லாமல் பக்தர்கள் அனைவரும்  பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் 50,000 துணிப்பைகளை வழங்கினார். இந்த திருவிழாவில் பாதுகாப்பிற்காக மதுரை மாவட்டம் சார்பில் 1,500 போலிசார்  ஈடுபடுத்தப்பட்டனர். ஆட்சியர் வீரராகவராவ் தாணிப்பாறை வழியாக சுந்தரமகாலிங்க திருக்கோயிலுக்கு நடந்து சென்று பிறகு, அங்கிருந்து வாழைத்தோப்பு வழியாக கீழே இறங்கினார். பக்தர்களின் வசதிக்காக இம்முறை கூடுதலாக பேருந்து வசதிகளும், மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டதாக மதுரை, விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!