வெளியிடப்பட்ட நேரம்: 20:40 (12/08/2018)

கடைசி தொடர்பு:20:40 (12/08/2018)

கமிஷன் பிரச்னையால் கிடப்பில் போடப்பட்ட நபார்டு திட்டம் - கொந்தளிக்கும் திமுக!

சிவகங்கை ஒன்றியத்தில் பத்திற்கும் மேற்பட்ட கிராமப்புற சாலைகள் கமிஷன் பிரச்னையால் நிர்வாணமாக காட்சியளிப்பதாகவும், அதைக்கண்டித்து திமுக நகர் செயலாளர் துரை ஆனந்த் ஊர்மக்களோடு சேர்ந்து பஸ் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருப்பது ஆளும் கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நபார்டு திட்டம்


இது குறித்து சிவகங்கை நகர் திமுக செயலாளர் துரை ஆனந்த் பேசும் போது, ``சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஒன்றியம் கீழ்க்கண்டனி முதல் வேம்பங்குடி வரையிலான தூரம்  3 கிலோமீட்டர் ஆகும். ஆனால் அதில் பாதி கிலோமீட்டர் தூரம்  தார்சாலை அமைக்கும் பணிகள் நபார்டு திட்டத்தின் கீழ் நடைபெற்று சுமார் மூன்று மாதங்களாகிவிட்டது. ரோட்டின் மேல்பரப்பில் ஜல்லியை பரப்பியது அப்படியே இன்னும் தார் ஊற்றி பணிகள் முடிக்கப்படாமல் கிடக்கிறது. 

இதனால் இக்கிராமத்தில் இருந்து சிவகங்கைக்கு வரும் பொதுமக்கள், மாணவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் எல்லாம்  ரெம்பவே பாதிக்கப்பட்டு வருகிறார்கள். டூவீலர், கார் எதுவுமே இந்த கரடுமுரடான சாலையில் போகமுடியவில்லை. இந்த கரடுமுரடு சாலையால் வேம்பங்குடி, உசிலங்குலம், உடையனாதபுரம், கடுக்காகுலம், மாடக்கோட்டை, உச்சப்புலி, வெல்லஞ்சி என பத்துக்கும் மேற்பட்ட ஊர் மக்கள் பெருமளவில்  பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகத்த்திடம் சாலையின் பணியை விரைவில் முடிக்கச்சொல்லி மனு கொடுத்தும் அந்த மனு கிடப்பில் கிடக்கிறது. திட்ட அதிகாரியான வடிவேலு இதைப்பற்றி கண்டு கொள்ளுவதாக தெரியவில்லை. ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளிடம் கேட்டால் மாவட்ட நிர்வாகம் தார் கொள்முதல் கமிசன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த சாலை அப்படியே திறந்த மேனியாக கிடக்கிறது என்கிறார்கள். இதைக்கண்டித்து வருகின்ற 20 ம் தேதி சிவகங்கை பஸ் நிலையம் முன்பு சிவகங்கை  திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்" எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க