`இது ஒரு கசப்பான அனுபவம்' - பதவி ஏற்புவிழா குறித்து அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள்!

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் உரிய இடம் ஒதுக்கப்படாததால் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

நீதிபதி பதவி ஏற்பு


சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக விஜயா தஹில் ரமணி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் நீதிபதிகளுக்கு உரிய இடம் ஒதுக்கப்படாததற்கு நீதிபதி ரமேஷ் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், `ராஜ் பவனில் உள்ள விழா ஏற்பாட்டாளர்களின் நடவடிக்கை ஒரு கசப்பான அனுபவம்.  இது ஒரு ஏமாற்றம் மட்டுமல்ல, அரசியல் கட்சியினருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் இடம் ஒதுக்கிய ராஜ்பவன் அதிகாரிகள் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்காமல் அவமதித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற பதிவாளர் ராஜ்பவனில் நீதிபதிகளுக்கு உரிய இடம் ஒதுக்கவேண்டும் என்று முன்கூட்டியே கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு பின்னால் உள்ள வரிசைகள் நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது எதிர்பாராதது; வெளிப்படையாக நடந்துள்ளது'' என்று நீதிபதி ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தற்போது இந்த சம்பவம் மட்டுமல்ல இதற்கு முன்பும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கோயில் திருக்கல்யாண நிகழ்வில் உரியஇடங்கள் ஒதுக்கப்படாத்தால் நீதிபதிகள் வெளியேறியதையும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்..

Do you like the story?

Please Appreciate the Author by clapping!