`முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது' - முதல்வர்தரப்பு வாதம்! | 18 MLA's disqualification case update

வெளியிடப்பட்ட நேரம்: 18:15 (13/08/2018)

கடைசி தொடர்பு:18:15 (13/08/2018)

`முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது' - முதல்வர்தரப்பு வாதம்!

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் தரப்பு வாதம் முடிவடைந்துள்ளது. அரசுக்கொறடா தரப்பு வாதத்துக்காக வழக்கு நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

தகுதி நீக்க வழக்கு


18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கை மூன்றாவது நீதிபதி சத்தியநாராயணன் விசாரித்து வருகிறார். இன்று மூன்றாவது நாளாக முதலமைச்சர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிட்டார். அப்போது அவர், `முதல்வருக்கு சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருக்கிறதா என ஆளுநர் முடிவெடுக்கும் நிலையை 18 எம்.எல்.ஏ-க்கள் ஏற்படுத்தியுள்ளனர். இதன்மூலம், அவர்கள் கட்சியின் உறுப்பினர் பதவியை தானாக விட்டுக் கொடுத்து விட்டதாகவே கருதமுடியும். அதனால்தான், 18 பேரையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர்  உத்தரவு பிறப்பித்தார். முதல்வரை மாற்றுவது குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது. அரசியல் விவகாரத்தில் ஆளுநர் தலையிட முடியாது, ஆளுநருக்கு  கடிதம் அளித்தது, ஆளுநரை எதிர்க்கட்சித் தலைவர் சந்தித்தது போன்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளே தகுதி நீக்கத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளதாகவும்' அவர் வாதிட்டார். முதல்வர் தரப்பு வாதம் முடிவடைந்ததை அடுத்து, அரசுக் கொறடா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணையை நீதிபதி சத்தியநாராயணன்,  நாளைக்கு தள்ளி வைத்தார். அரசுக் கொறடா தரப்பில் முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி வாதிட உள்ளார்.