மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல்! - சென்னைக்கு எந்த இடம் தெரியுமா? | chennai ranks 14 place in govt’s Ease of Living Index

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (13/08/2018)

கடைசி தொடர்பு:18:04 (13/08/2018)

மத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல்! - சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?

மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில் முதல் பத்து இடங்களுக்குள் தமிழகத்தின் எந்த நகரங்களும் இடம்பெறவில்லை. 

சென்னை

மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் குறித்த ஆய்வை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் மேற்கொண்டது. பொருளாதாரம், சமூகம், உள்கட்டமைப்பு, ஆளுமை உள்ளிட்ட நான்கு காரணிகளை அளவுகோலாகக் கொண்டு இந்தியா முழுவதும் சுமார் 111 நகரங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் பட்டியலில் மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு நகரங்கள் முதல் 10 இடங்களுக்கும் இடம்பிடித்துள்ளன. புனே நகரம் முதலிடத்தையும், நவி மும்பை இரண்டாம் இடத்தையும், கிரேட்டர் மும்பை மூன்றாம் இடத்தையும், தானே நகரம் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன. ஆந்திர மாநிலத்தின் கோயில் நகரமான திருப்பதி இப்பட்டியலில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது. 

சண்டிகர், ராய்பூர், இந்தூர், விஜயவாடா, போபால் உள்ளிட்ட நகரங்களும் முதல் பத்து இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளன. தலைநகரான டெல்லி மக்கள் வாழ்வதற்கு உகந்த பட்டியலில் 65-வது இடம் பிடித்துள்ளது. அதிகரித்து வரும் மக்கள் தொகை, காற்று மாசுபாடு, வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்களால் டெல்லி வாழ்வதற்கு உகந்ததாக இல்லை என மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இப்பட்டியலில் தமிழகம், உத்தரப்பிரதேசம், கர்நாடகம், மேற்குவங்கம் ஆகிய மாநில நகரங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வரவில்லை. தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு 14-வது இடமே கிடைத்துள்ளது. அதேபோல், தமிழகத்தின் வேறெந்த நகரங்களும் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close