”சுதந்திர தினத்தன்று மதுபானம் விற்க தடை!" - ஆட்சியர் உத்தரவு

"கரூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் 15.8.2018 அன்று மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

 மதுபானம்


நாடு முழுவதும்  வரும் 15 ம் தேதி சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகின்றன. சுதந்திர தின விழா நாடு முழுவதும் ஒரே நேரத்தில் கொண்டாடப்பட இருப்பதால் எந்தவித அசம்பாவிதங்களும்,இடையூறுகளும் ஏற்படகூடாது என்று நாடுமுழுவதும் பாதுகாப்பு பலபடுத்தப்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷன்கள்,விமான நிலையங்கள்,பேருந்து நிலையங்கள்,வழிபாட்டுத் தலங்கள் என்று பல இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கரூர் மாவட்டத்திலும் செய்யப்படுகிறது. கரூர் ரயில்வே ஸ்டேஷன்,பேருந்து நிலையம்,பசபதீஸ்வரர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தினத்தன்று மதுபானம் மற்றும் பீர் வகைகளை விற்க தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
 

 

இதுபற்றி,கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், "கரூர் மாவட்டத்தில் எதிர்வரும் 15.08.2018 (புதன்கிழமை) சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது. விதிமுறைகளை மீறி விற்பனை செய்பவர்கள் மீது தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) விதிகள் 2003-ன் படியும்,(Tamilnadu Liguor License and Permit) Rules1989-ன் படியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!