மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம்..!

தி.மு.க தலைவர் கருணாநிதியின் மறைவை அடுத்து, அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

அறிவாலயம்

தி.மு.க தலைவர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி உயிரிழந்தார். அவருடைய இறப்பைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் பதவி காலியாக உள்ளது. விரைவில், பொதுக்குழுக் கூட்டம் நடத்தி தி.மு.க தலைவர் நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக, இன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், 'மு.க.ஸ்டாலின் தலைமையில், 14-ம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க செயற்குழு அவசரக் கூட்டம் நடைபெறும். அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும். கூட்டத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க-வின் உண்மை விசுவாசிகள் தன்பக்கம் இருப்பதாக மு.க அழகிரி நேற்று தெரிவித்துள்ள கருத்தால், இன்றைய செயற்குழுக் கூட்டம் அதிக கவனம்பெற்றுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!