அழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்! | karunanidhi wrote letter about azhagiri was shared by azhagiri supporters

வெளியிடப்பட்ட நேரம்: 10:02 (14/08/2018)

கடைசி தொடர்பு:12:06 (14/08/2018)

அழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்!

கருணாநிதி, முன்னர் அழகிரியைப் பாராட்டி தன் கைப்பட எழுதிய கடிதத்தைத் தற்போது வெளியிட்டுள்ளனர் அழகிரி ஆதரவாளர்கள்.

நேற்று (13-8-2018) காலை மெரினா கடற்கரையிலுள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு குடும்பத்துடன் சென்ற அழகிரி, அஞ்சலி செலுத்தினார். பின்னர் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் என் பக்கம் இருக்கிறார்கள். என்ன ஆதங்கம் என்பது பின்னால் தெரியும்’ என்று பேசி புயலைக் கிளப்பினார். அழகிரியின் இந்தப் பேச்சு, தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்நிலையில், இன்று தி.மு.க செயற்குழுக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த நிலையில் கருணாநிதி, அழகிரியைப் பாராட்டி முன்னர் தன் கைப்பட எழுதிய கடிதத்தைத் தற்போது வெளியிட்டுள்ளனர்.

அந்தக் கடிதத்தில், “அண்ணன் பட்டுக்கோட்டை அழகிரியின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தவர்கள், என் மகன் அழகிரியை நினைக்காமல் இருக்க முடியாது. 

அழகிரி பிறந்தபோது, அய்யா பெரியார் அவர்கள் என் வீட்டுக்கே வந்து, மடியில் தூக்கிவைத்துக்கொண்டு கொஞ்சியது இன்னும் என் நெஞ்சில் நிழலாடுகிறது!

எல்லோருக்கும் கயல்விழிபோல பிள்ளை வாய்ப்பதில்லை என்று அழகிரி மீது அன்பால் பொறாமை கொள்வோரை நான் அறிவேன். 
அதற்கு எடுத்துக்காட்டு, தந்தையைப் பற்றி கயல்விழி வெளியிட்டுள்ள இந்த மலரே ஆகும்.

நான் சந்தித்து போல், எத்தனையோ சதிகள், எத்தனையோ துரோகங்கள், எத்தனையோ எதிர்ப்புகள், அடக்குமுறைகள், அவதூறுகள். என்ன செய்வது அப்பாவுக்குத் தப்பாது பிறந்த பிள்ளை! வாழ்க அழகிரி பல்லாண்டு!” என எழுதியுள்ளார். 

இதனால், தி.மு.க-வில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க