வெளியிடப்பட்ட நேரம்: 12:27 (14/08/2018)

கடைசி தொடர்பு:14:37 (14/08/2018)

வழக்குகள் சி.பி.ஐ-க்கு மாற்றம்; தேசியப் பாதுகாப்புச் சட்டம் ரத்து! - துப்பாக்கிச் சூடு வழக்கில் உயர் நீதிமன்றம் அதிரடி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உயர் நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, மே 22-ம் தேதி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்ட அம்மாவட்ட மக்களைக் காவல்துறையினர் சுட்டுக் கொலைசெய்தனர். அதில், 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சுமார் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடுக்கப்பட்டது. அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு முன்னர், மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சி.டி.செல்வம், பஷீர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரிப்பதால் எந்தப் பலனும் இல்லை. அதுவும், மாநிலக் கட்டுப்பாட்டுக்குள் தான்வரும். எனவே, இதுதொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-க்கு மாற்றப்படுகிறது. மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 6 பேர்மீது தொடரப்பட்ட தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கு ரத்துசெய்யப்படுகிறது' என்று உத்தரவிட்டனர்.