ஸ்டெர்லைட்டுக்கு ஏதிரான மேல்முறையீடு..! விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம் | Apex court gave approval to the case against Sterlite

வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (14/08/2018)

கடைசி தொடர்பு:16:40 (14/08/2018)

ஸ்டெர்லைட்டுக்கு ஏதிரான மேல்முறையீடு..! விசாரணைக்கு ஏற்ற உச்ச நீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வதற்கு அந்நிர்வாகத்துக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. 

உச்ச நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்து, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், தமிழக அரசின் ஆணையில் தலையிட முடியாது. ஆனால், நிர்வாக ரீதியான பணிகளை மேற்கொள்ளலாம் என ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி வழங்கியது. பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கைவைத்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்தது. ஆகஸ்ட் 17-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரவுள்ளது.