வெளியிடப்பட்ட நேரம்: 16:51 (14/08/2018)

கடைசி தொடர்பு:17:00 (14/08/2018)

முதன்முறையாக சுதந்திர தினத்தில் கொடியேற்றப்போகும் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்!

குடியரசு தினத்தில் கவர்னரும் சுதந்திர தினத்தில் முதல் அமைச்சரும் தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் சுதந்திர தினத்தில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் கொடியேற்றுவார். குடியரசு தினத்தில் கடற்கரை காந்தி சிலை அருகில் கவர்னர் தேசியக் கொடியை ஏற்றி வைப்பார். இந்த இரண்டு தினங்களிலும் மாலையில் ராஜ்பவன் மாளிகையில் கவர்னர் தேனீர் விருந்து அளிப்பது மரபு. 

சுதந்திர தினத்தில் தேனீர் விருந்து அளிப்பது தவிர, கவர்னருக்கு வேறு வேலைகள் கிடையாது. சுதந்திர தினத்தில் முதல்வர் கோட்டையில் கொடியேற்றும்போது கவர்னர் மாளிகையில் தேசியக் கொடியை இதுவரையில் கவர்னர் ஏற்றியதில்லை. எப்போதும் இல்லாத வழக்கமாக இந்த ஆண்டு சுதந்திர தினத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக் கொடியை கவர்னர் மாளிகையில் ஏற்றப்போகிறார். இதற்காக கொடிக் கம்பம் எல்லாம் ரெடி செய்திருக்கிறார்கள். நாளை காலை 8.30 மணிக்கு ஆளுநர் மாளிகை அருகில் உள்ள காந்தி சிலை அருகே தேசியக் கொடி ஏற்ற முடிவாகியிருக்கிறது. 

கவர்னர் பன்வாரிலால் புரோகித்

கவர்னர் மாளிகையின் முகப்பில் எப்போதும் தேசியக் கொடி பறந்துகொண்டே இருக்கும். தினமும் காலையில் ஏற்றப்பட்டு மாலையில் இறக்கப்படும். இது அன்றாடம் நடக்கும் விஷயம். ஆனால், சுதந்திர தினத்தில் தனியாக தேசியக் கொடியை இதுவரை ஏற்றியதில்லை. முதன்முறையாக இப்போதுதான் தேசியக் கொடியை ஏற்றப்போகிறார்கள். 

கவர்னர் பன்வாரிலால் புரோஹித் மாவட்டம்தோறும் ஆய்வு கூட்டங்கள் நடத்தி வரும் சூழலில் முதன்முறையாகச் சுதந்திர தினத்தில் கொடியேற்றும் நிகழ்வு நடக்கப்போகிறது. போட்டி அரசாங்கம் நடத்துகிறார் எனப் பன்வாரிலால் புரோஹித் மீது விமர்சனங்கள் வைக்கப்படும் நிலையில் இப்போது கவர்னர் மாளிகையில் தேசியக் கொடியை ஏற்றும் நிகழ்ச்சி நடத்த முடிவாகியிருப்பது விமர்சனங்களைக் கிளப்பலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க