கருணாநிதி சமாதியில் கதறி அழுத தமிழரசி.. தேற்றிய கனிமொழி - நெகிழ்ச்சி சம்பவம்!

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் கனிமொழி தலைமையிலான மகளிர் அணியினர் அஞ்சலி செலுத்தினர். அப்போது நிகழ்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழரசி

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். கருணாநிதி மறைவுக்குப்பின் அவரில்லாத தி.மு.க.வின் முதல் செயற்குழுக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில், மறைந்த கட்சித் தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் க.அன்பழகன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, கனிமொழி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். செயற்குழுக்கூட்டம் நிறைவடைந்ததையடுத்து, மகளிர் அணி சார்பில் தி.மு.க தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி சென்னை சேப்பாக்கத்திலிருந்து மெரினாவில் உள்ள  கருணாநிதி நினைவிடம் வரை, தி.மு.க மகளிரணித்தலைவி கனிமொழி தலைமையில் அமைதிப்பேரணி நடைபெற்றது.

தமிழரசி

இதில், முன்னாள் அமைச்சர் தமிழரசி, சிம்லா முத்துச்சோழன் உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் கனிமொழி உள்ளிட்ட மகளிரணி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர். அப்போது தி.மு.க முன்னாள் அமைச்சர் தமிழரசி, கருணாநிதியின் நினைவிடத்தில் கைகளை முகத்தில் மூடிக்கொண்டு கதறி அழுதார். அவர் அழுவதைக்கண்ட கனிமொழி, அவரை தேற்ற முயற்சி செய்தார்; தொடர்ந்து அழுதுகொண்டிருந்த தமிழரசிக்கு ஆறுதல் கூறி தேற்றினார் கனிமொழி. இந்த நிகழ்வு அருகிலிருப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!