வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (15/08/2018)

கடைசி தொடர்பு:00:30 (15/08/2018)

`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்!’ - கமல் அறிவுறுத்தல்

கிராம சபை கூட்டங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்

மக்கள் நீதி மய்யக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கிராமசபைகளின் முக்கியத்துவம் குறித்து அவர் பேசியுள்ளார். வீடியோவில் கமல் பேசுகையில், `நாளை நடக்கவிருக்கும் நடக்க வேண்டிய கிராம சபை கூட்டங்கள் உங்கள் வலுவை நிருபிக்கும். உங்கள் வலுவை உங்களுக்குத் தெரிவிக்கும். விஷம் கக்கும் ஆலை முதல் எட்டுவழிச்சாலை வரை எது வேண்டும் எது வேண்டாம் என்று முடிவெடுக்கும் பலம் உங்கள் கையில் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்.சட்டத்தின் நுணுக்கங்கள் எல்லாம் சொல்லி, இது வேலைக்கு ஆகாது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால், கிராமத்தின் பலம் மய்யம் வரை சென்றடையும். காந்தியார் புரிந்ததுபோல் கிராமத்தாரும் புரிந்து கொள்ள வேண்டும் எனபது என் வேண்டுகோள்.தயவு செய்து உங்கள் கிராம சபை கூட்டங்களை நடத்துங்கள். அது உங்கள் கரங்களை வலுப்பெற செய்யும்” என தெரிவித்துள்ளார்.