சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்! அலட்சியமாக பதிலளித்த கடை உரிமையாளர் | worms in chicken biryani

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (15/08/2018)

கடைசி தொடர்பு:03:00 (15/08/2018)

சிக்கன் பிரியாணியில் நெளிந்த புழுக்கள்! அலட்சியமாக பதிலளித்த கடை உரிமையாளர்

செங்கல்பட்டில் பிரபல பிரியாணி கடை ஒன்றில் சாப்பிட சென்றவர்கள் ஆர்டர் செய்த பிரியாணியில் உள்ள சிக்கனில் புழுக்கள் நெளிந்தன.

பிரியாணி

காஞ்சிபுரம் மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் தொலைக்காட்சி நிருபர்களாக பணியாற்றும் சுதாகர், ஆறுமுகம், விஜய் ஆகியோர் இன்று மாலை செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்கு சென்றனர். உணவுக்கு காத்திருந்தவர்களுக்கு, சர்வர் கொண்டுவந்து வைத்த பிரியாணியில் புழுக்கள் நெளிந்ததால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இதுகுறித்து நம்மிடம் பேசிய செய்தியாளர் சுதாகர், “காலையிலிருதே வேலைப்பளு அதிகம் இருந்ததால் இன்று மதியம் சாப்பிடவில்லை. மாலை 6 மணிக்கு செங்கல்பட்டு பேருந்து நிலையம் அருகே உள்ள தலப்பாகட்டு பிரியாணி கடைக்கு சென்று சிக்கன் பிரியாணி ஆர்டர் செய்தோம். சில நிமிடங்கள் கழித்து நாங்கள் ஆர்டர் செய்த சிக்கன் பிரியாணியை சர்வர் கொண்டு வந்து வைத்தார். உடனே நண்பர்கள் விஜய் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் அதை எடுத்து வேகமாக சாப்பிட ஆரம்பித்தனர். அப்போது நான் சாப்பிட கையில் எடுத்த சிக்கன் துண்டை பார்க்கும் போது,  அதில் புழுக்கள்  நெளிந்து கொண்டிருந்தது. இதைக் கண்டதும் அதிர்ச்சி தாங்க முடியவில்லை. உடனே என்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நண்பர்களிடம் இதை காட்டினேன். அவர்கள் இதைக் கண்டதும் சாப்பிட்டுக் கொண்டிருந்த சிக்கனை தட்டில் வைத்துவிட்டு, அங்கேயே வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டனர். ஹோட்டல் உரிமையாளரிடம் முறையிட்டபோது அலட்சியமாக பதில் கூறினார்கள்.” என்கிறார் அதிர்ச்சியாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க