வெளியிடப்பட்ட நேரம்: 05:30 (15/08/2018)

கடைசி தொடர்பு:05:30 (15/08/2018)

வியூகம் இருந்தால் தான் வெற்றி கிடைக்கும்... பாராட்டு விழாவில் நீதிபதி பேச்சு

வியூகம் இருந்தால் தான் வாழ்க்கை , விளையாட்டு என்று எல்லா இடத்திலும் வெற்றி காண முடியும் என பாராட்டு  விழாவில்  நீதிபதி கருத்து தெரிவித்தார்.

நீதிபதி

 

மதுரை உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கத்திற்கான மின்நூலகம் திறப்பு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோவையில் நடைபெற்ற போட்டியில் மதுரை உயர்நீதி மன்ற கிளை வழக்கறிஞர்கள் வெற்றதற்கு  பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது. இதில் நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தலைமையேற்று பேசுகையில் " மின் நூலகம் இந்த காலகட்டத்தில் தவிர்க்க முடியாதது. வளர்சியை தொடர்ந்தே நாம் செல்ல வேண்டும்.  மின் நூலகத்தை அனைவரும் பயன்படுத்தவேண்டும் . பாரதியார் சொன்ன கருத்துகளை ஏற்று தமிழை நாம் ஆழ்ந்துபடிக்கவேண்டும். மதுரைக்காரங்க வீரமும் , பாசமும் உடையவர்கள். அதனால்  அவர்களிடன் வெற்றியும் வந்து சேர்கிறது . வீயூகம் என்பது போர்க்களத்திலும் சரி ,  வாழ்க்கையிலும் சரி , விளையாட்டிலும் சரி எல்லா இடத்திலும் இருக்கவேண்டும். கபாடி போட்டி என்பது மிகச்சிறந்த விளையாட்டுகளில் ஒன்று  அதில் பல நுணுக்கங்கள் உள்ளது . விளையாட்டுகள் புராணங்களில் கூட பெருமை படுத்தப்படுத்தப்படுகிறது . போர்களத்தில்  வியூகம் வைத்து செயல்படுவது போல் விளையாட்டிலும் வியூகம் தேவை அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும் . விளையாட்டில் வெற்றி தோல்விகளை சமமாக எடுத்துக்கொள்ளவேண்டும்  என தெரிவித்தார் .