மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலையானார் மாவோயிஸ்ட் சைனா...!

கடந்த மூன்று ஆண்டுகளாக சிறையில் இருந்த மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் ரூபேஷின் மனைவி சைனா ஜாமீனில் விடுதலையானார்.

சைனா

கோவை, கருமத்தம்பட்டி பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு க்யூ பிரிவு போலீஸார் 5 பேரை கைது செய்தனர். அதன்படி மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர், ரூபேஷ், அவரது மனைவி சைனா, கண்ணன், அனூப், வீரமணி ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் மீது, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA) போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சிம்கார்டு வாங்கியது உள்பட 17 வழக்குகள் பதியப்பட்டன. இதையடுத்து, கடந்த மூன்று ஆண்டுகளாக, விசாரணை கைதிகளாக இருந்துவந்தனர்.

இதனிடையே, கருமத்தம்பட்டி வழக்கில் இருந்து கடந்த 2016-ம் ஆண்டு ஜாமீன் கிடைத்தும், மற்ற வழக்குகளில் ஜாமீன் கிடைக்காததால் சைனா தொடர்ந்து சிறையில் இருந்தார். இந்நிலையில், சைனா சார்பில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அனைத்து வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கிடைத்ததால், அவர் கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் இருந்து செவ்வாய்கிழமை மாலை விடுதலையானார்.

அவரை, மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் முழக்கங்களுடன் வரவேற்றனர்.  கோவை க்யூ பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சைனாவின் கணவர் ரூபேஷ் கேரள சிறையிலும், கண்ணன், அனூப், வீரமணி ஆகியோர் கோவை சிறையிலும் இருக்கின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!