போலீஸ் பாதுகாப்போடு நடத்தப்படும் அரசு மணல் குவாரி! விவசாயிகள் வேதனை

போலீஸ் துணையோடு மக்களை மிரட்டி மணல் குவாரி நடத்துவதாக தமிழக அரசு மீது அனைத்து கட்சியினரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

போராட்டம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை, செய்களத்தூர்,வாகுடி ஆகிய கிராமத்திற்குட்பட்ட வைகைஆற்றில் மணல் அள்ள தமிழக அரசு முடிவெடுத்துள்ளது முதல் கட்டமாக இதில் தெ.புதுக்கோட்டை பகுதியில் மணல் அள்ள டெண்டர்  விடப்பட்டு மணல் அள்ளுவதற்கான அடிப்படை பணிகள்   நடந்துகொண்டிருக்கிறன.இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காக அனைத்துக்கட்சியினரும் மானாமதுரையில் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். கடந்த இரண்டு மாதங்களாக விவசாயிகள் மணல்குவாரி திறக்க கூடாது என்று  கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இன்று அக்கிராம மக்கள் உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இந்த மணல் குவாரியை நடத்த வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் லதா அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார்.அதில் இந்த குவாரியால் அந்த ஊர் மக்களுக்கோ,விவசாயத்திற்கோ, குடிதண்ணீருக்கோ பிரச்சனை வராது.மேலும் தமிழகம் முழுவதும் அரசு மணல் குவாரி திறக்கப்பட்ட நிலையில் இங்கே மட்டும் திறக்காவிட்டால்..? என்று பேசியிருக்கிறார்.

இதனையடுத்து தெ.புதுக்கோட்டை கிராம மக்கள், அனைத்து விவசாய சங்கங்கள் ஒன்று சேர்ந்து உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். இதுகுறித்து பேசிய விவசாயிகள்,  “மாவட்ட நிர்வாகம் போலீஸ் துணையோடு மணல் குவாரியை நடத்தி வருகிறது.கடந்த முறை அரசு மணல் குவாரி இருந்த போது வேதியரேந்தல் தடுப்பணை   பழுதாகும் அளவிற்கு மண் அள்ளிவிட்டார்கள். வறட்சி யான பகுதியாக இருந்தாலும் இங்கிருந்து பல்வேறு பெயர்களில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. சிவகங்கை மாவட்டத்தை அளும் கட்சியினரும் ,அரசாங்கமும் கூறுபோட்டு விட்டார்கள் .இந்த மாவட்டத்தில் உள்ள ஊர் மக்கள் அகதிகளாக வடக்கு மாவட்டத்தை நோக்கி செல்லும் நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்”.என்று விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!