அழகப்பா பல்கலைக்கழகத்தில் மகாத்மா காந்தி பெயரில் இருக்கை!!

இந்தியாவின் தேச தந்தை என்று போற்றப்படும் மகாத்மா காந்தி பெயரில் இந்தியாவில் எந்த பல்கலைக்கழகத்திலும் இருக்கை ஒதுக்கப்படவில்லை.முதன் முதலாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மகாத்மாகாந்தி பெயரில் இருக்கை ஒதுக்கி பெருமைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம்  காந்தியவாதிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறார் இதன் துணைவேந்தர் ராஜேந்திரன்.

“சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இயங்கி வருகிறது அழகப்பா பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகம் பல்வேறு புதிய கல்வி திட்டங்களை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியும் ஆராய்ச்சியும் செய்து வருகிறது. இந்த கல்வியாண்டில் இப்பல்கலைக்கழகத்திற்கு புதிய துணைவேந்தராக ராஜேந்திரன் பதவியேற்றார்.தேசதலைவர்கள் பெயரில் பல்வேறு மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் இருக்கைகள் இருக்கும் போது மகாத்மா காந்தி பெயரில் எந்த மாநிலத்திலும் எந்த பல்கலைக்கழகத்திலும் அவருடைய பெயரை தாங்கிய இருக்கை இல்லை என்பதற்காக முதன் முதலாக அழகப்பா பல்கலைக்கழகத்தில் மகாத்மாகாந்தி இருக்கை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இருக்கையின் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சிகள் வாயிலாக பொது கொள்கை முடிவுகள் எடுப்பதற்கும் உயர்கல்வி நிறுவனங்களின் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு திறன் வளர் பயிற்சி அளிப்பதற்கும் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிடுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்கிறார் துணைவேந்தர் ராஜேந்திரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!