வெளியிடப்பட்ட நேரம்: 12:58 (15/08/2018)

கடைசி தொடர்பு:12:58 (15/08/2018)

கிராம சபைக் கூட்டத்தில் களமிறங்கிய ப.சிதம்பரம்!

கிராம சபைக் கூட்டத்தில் ப.சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகிலுள்ள காளாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டு அக்கிராம மக்களோடு வளர்ச்சிப் பணிகள் குறித்துப் பேசினார்கள்.

கடந்த சில மாதங்களாகவே ப.சிதம்பரம் கட்சி நிர்வாகிகளை சந்தித்து கூட்டம் நடத்தி வருகிறார். அந்தக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் கிராம சபா கூட்டத்தில் கலந்து கொண்டு கிராம மக்களுக்கு பஞ்சாயத்து ராஜ் குறித்தும் கிராம நிர்வாகத்துக்கு என்ன அதிகாரம் இருக்கிறது. கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு என்ன வலிமை இருக்கிறது என்றெல்லாம் நாம் மக்களிடம் விளக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் ப.சிதம்பரம்.

அதன் அடிப்படையில் இன்று காளாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக்கூட்டத்தில் கலந்துகொண்டு அந்த மக்களிடம் கிராம வளர்ச்சி குறித்து மக்களே தீர்மானம் நிறைவேற்றியது பெருமைப்பட வேண்டியிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் பேசியவர், `உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறாததால் மத்திய அரசு கொடுக்கக்கூடிய 2800 கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது. கிராம மக்கள் சார்பாக ப.சிதம்பரத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதில் காவிரி நதி தண்ணீரை பாலாறு, உப்பாறு வழியாக எங்கள் பகுதிக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் கிராம மக்கள். நிகழ்ச்சியின் முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சுதந்திர தினம் வாழ்த்துகள் பரிமாறப்பட்டன.

நீங்க எப்படி பீல் பண்றீங்க