`பெண்களை வலையில் விழவைத்தது எப்படி?'- கால் டாக்ஸி டிரைவரின் அதிர்ச்சி வாக்குமூலம்

சென்னையில் நவீனக் கொள்ளையில் ஈடுபட்டுவந்த கால் டாக்ஸி டிரைவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பெண்களிடம் நூதன முறையில் நகைகளைக் கொள்ளை அடித்தது மற்றும் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

ரமேஷ் குமார்

இதுகுறித்து நம்மிடம் விவரித்த நீலாங்கரை போலீஸார், `சென்னையில் டாக்ஸி டிரைவராக உள்ள சுரேஷ் குமார் பல பெண்களை ஏமாற்றி வருவதாக இரண்டு பெண்கள் நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, சுரேஷ் குமாரை கண்காணிக்க முடிவு செய்தோம். இதன் பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை அவர் கூறியுள்ளார்.

அவர் அளித்த வாக்குமூலத்தில், `பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். சொந்தமாக டாக்ஸி வைத்துள்ளேன். தனியாக வேலைக்குச் செல்லும் பெண்களைத்தான் குறிவைப்பேன். அதுமட்டுமல்லாமல், தனியாக நடந்து செல்லும் பெண்கள் அருகில் காரை நிறுத்தி, அவர்களிடம் பேச்சுக் கொடுப்பேன். தனது டாக்ஸி ஓனருக்கு இன்று பிறந்தாள். இதனைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் சுமங்கலி பெண்களுக்குப் பட்டுப்புடவை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறார். அதனால், நீங்களும் வாருங்கள், உங்களைப் பத்திரமாக அழைத்துச் சென்று மீண்டும் பத்திரமாக அழைத்து வருவேன். என்னை நம்புங்கள் என்றுகூறி அவர்களின் நம்பிக்கையைப் பெற்றுவிடுவேன். 

கால் டாக்ஸி

அதன் பின்னர், நம்பி வரும் பெண்களை காரில் ஏற்றிச் சென்று யாரும் இல்லாத இடத்தில் காரை நிறுத்திவிடுவேன். கத்திமுனையில் அவர்களை மிரட்டி நகைகளைப் பறித்துவிடுவேன். சில பெண்களை பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தியுள்ளேன். அதன் பின்னர், பெண்களைப் பாதியில் இறக்கி விட்டுவிடுவேன். இதேபோல், டாக்ஸியில் தனியாகப் பயணிக்கும் பெண்களிடமும் நடந்து கொண்டுள்ளேன்' என்று வாக்கு மூலம் அளித்துள்ளார் என போலீஸார் கூறினார். இதையடுத்து, ரமேஷ் குமார்மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் போலீஸார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!