வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (15/08/2018)

கடைசி தொடர்பு:17:20 (15/08/2018)

நடுரோட்டில் 2 வயது குழந்தையை நெகிழவைத்த முதல்வர் பழனிசாமி!

72-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் நடந்த சமபந்தி விருந்தில் கலந்துகொண்டு பொதுமக்களுடன் சேர்ந்து உணவருந்தினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

பழனிசாமி

நாடு முழுவதும் 72-வது சுதந்திர தினம் இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்துப் பேசினார். அதேபோல், தமிழக அரசு சார்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். முன்னதாக காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர், அனைத்துத் துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்குப் பல்வேறு விருதுகளும் வழங்கி கௌரவித்தார். 

இதன்பிறகு சென்னை கே.கே நகர் அருள்மிகு சக்தி விநாயகர் கோயிலுக்குச் சென்ற அவர், சிறப்பு வழிபாடு மற்றும் பொதுவிருந்தில் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார். முன்னதாக கோயிலுக்குச் செல்லும் வழியில் அவருக்குப் பொதுமக்கள் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர். இதைப் பார்த்த அவர் வண்டியிலிருந்து இறங்கி சிறிது தொலைவு நடந்து சென்றார். அப்போது, சாலையில் நின்றிருந்த இரண்டுவயதுச் சிறுமிக்கு அவர் கைகொடுத்து நெகிழவைத்துடன், அதனை தனது ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க