`மிரட்டும் மழை!’ - வெள்ளத்தில் மிதக்கும் கன்னியாகுமரி மாவட்டம்

ன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக தாமிரபரணி, பழையாறு கரையோர கிராமங்களில் தண்ணீர் புகுந்துள்ளன. 5 முகாம்களில் 273 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர். நாளையும் கனமழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மழை

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக விடாமல் மழை பெய்துவருகிறது. இதனால் பெருஞ்சாணி அணை திறக்கப்பட்டுள்ளது. பழையாறு, மற்றும் தாமிரபரணி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளன. பழையாற்றில் ஏற்பட்டுள்ளதால் தெரிசனங்கோப்பு, திட்டிவிளை, ஈசாந்திமங்கலம் ஆகிய பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட வயல்வெளிகளில் தண்ணீர் புகுந்துள்ளன.

kulithurai ayyappan temple மழை

வீரநாராயண மங்கலம் கிராமத்தில் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் பெருக்கால் விளவங்கோடு தாலுகாவில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திக்குறிச்சி, குழித்துறை, திருவட்டாறு, சென்னித்தோட்டம், மங்காடு, அருவிக்கரை, பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது. குழித்துறையில் வாவுபலி பொருட்காட்சி முற்றிலும் மூழ்கியது.

மழை

வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் வெளியேறிய பொதுமக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கீரிப்பாறை, பள்ளிக்கல், மாங்காடு, பார்த்திபபுரம், ஞாலம் ஆகிய பகுதிகளில் 5 முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதில் 273 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழை பாதித்த பகுதிகளை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே அதிகாரிகளுடன் பார்வையிட்டு வருகிறார்.

மழை

இன்று காலை முதலே மழை பெய்துவருவதால் சுதந்திரதின நிகழ்ச்சிகள் அரை மணி நேரத்தில் நடத்தி முடிக்கப்பட்டன. நலத்திட்ட உதவிகள் மட்டும் வழங்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் ரத்துச்செய்யப்பட்டன. மேலும் கலெக்டர் மனுநீதிநாள் முகாம் உள்ளிட்டவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மழை பாதிப்புக்காக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகளுக்கு 1077 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைக்க, மாவட்ட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!