`காவிரியில் 100 இடங்களில் தடுப்பணைகளும் கதவணைகளும் கட்ட வேண்டும்!’ - விவசாயிகள் கோரிக்கை

காவிரி

கர்நாடகாவில் அதிகளவில் மழை பொழிந்து வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவானதால், ஏற்கெனவே அங்கிருந்து தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 75 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. டெல்டா பாசனத்திற்கு அங்கிருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனாலும் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் ஆதங்கப்பட்டார்கள்.

இந்நிலையில் மீண்டும் கர்நாடகாவில் கனமழை பொழிவதால், அங்கிருந்து வினாடிக்கு ஒரு லட்சம் நாகராஜன்கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கடைமடைப் பகுதிகள் தற்பொழுதும் காய்ந்துதான் கிடக்கிறது. இனிவரும் ஆண்டுகளில் இதுபோன்ற அவலம் நிகழாமல் தடுக்க கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகிறார்கள்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாய அணித் தலைவர் புலியூர் நாகராஜன், ‘’ஆறுகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணிர் சென்று சேரவில்லை. காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டுள்ள தண்ணீரில் சுமார் 50 ஆயிரம் கன அடி நீர் கடலில் கலக்க வாய்ப்புள்ளது. காமராஜர் ஆட்சியில் 13 அணைகள் கட்டப்பட்டன. ஆனால், அதன்பிறகு திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் புதிதாக எந்த ஒரு அணையும் கட்டப்படவில்லை. இனிவரும் ஆண்டுகளில் காவிரி நீர் அதிக அளவில் கடலில் கலப்பதைத் தடுக்க காவிரி மற்றும் கொள்ளிடத்தில் 100 இடங்களில் தடுப்பணைகளும் கதவணைகளும் கட்ட வேண்டும். தற்பொழுது, கடைமடை விவசாயிகளின் பிரச்னையைத் தீர்க்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவோம்” என எச்சரித்தார்.  

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!