காமராஜர் ஏற்றிய கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றிய காங்கிரஸ் பிரமுகர்!

சென்னை கிழக்கு மாவட்டம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில் வாசலில் இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவுப்பொழுதில் 1947 ஆகஸ்டு 15 அதிகாலை 12 மணிக்கு பெருந்தலைவர் காமராஜர் தன் திருக்கரங்களால் கொடியேற்றி வைத்தார். 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க அக்கொடிக்கம்பத்தில் இன்று சென்னை கிழக்குமாவட்ட காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சிவ.ராஜசேகரன் தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்.

காமராஜர்

கொட்டித்தீர்த்த மழையின் நடுவே மிகுந்த சிரமங்களுக்கிடையில் திருவல்லிக்கேணி கிழக்கு பகுதி தலைவர் ஜெ.வாசுதேவன் மற்றும் கம்பத்தை பராமரித்துவரும்  வட்டத்தலைவர் கோமேதகம் கொடியேற்று விழாவை ஏற்பாடு செய்தனர். மழை நிற்காது பெய்ததால் நிகழ்ச்சி இருக்காது என எண்ணி வழக்கமாக திரளும் காங்கிரஸ் நிர்வாகிகள் உறக்கத்தில் ஆழ்ந்தனர்.

 72 ஆண்டுகள் தடைபடாது நடந்த கொடியேற்று நிகழ்ச்சி கண்டிப்பாக நடைபெறவேண்டும் என உறுதியேற்று சென்னை கிழக்குமாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன், சேப்பாக்கம் தணிகாசலம், வழக்கறிஞர்கள் ஆரோக்யதாஸ், அஸ்வின், விஸ்வா மற்றும் முன்னாள் சர்க்கிள் தலைவர் முருகேசன், தணிகைவேல், நேதாஜி, செல்வம் உட்பட பலர் பங்கேற்க சரியாக 12 மணிக்கு வந்தேமாதரம் என முழக்கத்துடன் மூவர்ண தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!