வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (16/08/2018)

கடைசி தொடர்பு:09:21 (16/08/2018)

சிறப்புக் குழந்தைகள்  கொண்டாடிய சுதந்திர தின விழா!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாடு முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகள் பல தரப்பினர்களால் கொண்டாடப்பட்ட நிலையில், மதுரையில் உள்ள சிறப்புக் குழந்தைகளும் ஆதரவற்ற குழந்தைகளும் இதற்கு சளைக்காமல் தங்களுடைய புதுப்புது திறமைகளை வெளிப்படுத்தி சுதந்திர தினத்தைக் கொண்டாடினர்.

குழந்தைகள்

மதுரையைச் சேர்ந்த குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பான  படிக்கட்டுகள் மற்றும் MGLF (சிறப்புக் குழந்தைகளுக்கான தன்னார்வ அமைப்பு) இணைந்து, சிறப்புக் குழந்தைகளையும் காப்பகக் குழந்தைகளையும் இணைத்து சுதந்திர தினத்தில் பல்வேறு போட்டிகள் நிகழ்த்திப் பரிசுகள் வழங்கினர்.

பங்கேற்ற குழந்தைகள், அனைவரும் போட்டி மனப்பான்மையுடன் இருந்தாலும் மற்றொரு சிறப்புக் குழந்தைக்கு ஆதரவாக இருந்து போட்டியில் கலந்துகொண்டு அவர்களையும் பரிசுபெறச் செய்தது, நெகிழ்ச்சி! பெரிய பெரிய வளர்ச்சிகள் கண்டு, வெவ்வேறு திக்கில் பயணித்து, 'நீயா நானா?' என்று யுத்த கள வீரர்களாக திசையறியாமல் ஓடிக்கொண்டிருக்கும் நவயுக நாயகர்களுக்கும், குழந்தைகள் ஜாலியாக கையாளும் சாகசங்கள் சவால்களாகவே இருக்கின்றன.