வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (16/08/2018)

கடைசி தொடர்பு:12:05 (16/08/2018)

54 நிமிடத்தில் 896 கேள்விகளுக்குப் பதில்! ஆச்சர்யப்படவைத்த மாணவி

'உலக சாதனை சாம்பியன்' என்ற அமைப்பு நடத்திய போட்டியில், நினைவாற்றலில் இரண்டு வகையான உலக சாதனைகளைப் படைத்துள்ளார், மதுரை மாவட்டம்  திருமங்கலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவி தட்சண்யா.

இரண்டு உலக சாதனை படைத்த மாணவி தட்சண்யா


அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் உட்பட ஐந்து நடுவர்கள் பங்கேற்க, திருமங்கலத்தில் நடந்த சாதனை  நிகழ்ச்சியில், 9-ம் வகுப்பு படித்துவரும் மாணவி தட்சண்யா  கலந்துகொண்டு, திருக்குறளில் 133 அதிகாரங்களை 54 விநாடியில் கூறி, இதற்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த மாணவர் 3 நிமிடத்தில் கூறியதை முறியடித்து உலக சாதனை செய்து அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தார்.

அதைத் தொடர்ந்து, மதுரையைப் பற்றிய  896 கேள்விகளுக்கு 54 நிமிடத்தில் விடையளித்து புதிய உலக சாதனையைப் படைத்தார். இதற்குமுன்  நெல்லூரைச் சேர்ந்த மாணவர், ஒரு மணி நேரத்தில் 700 கேள்விகளுக்கு விடையளித்த சாதனையை, இதன்மூலம்  முறியடித்துள்ளார். இளம் வயதிலேயே நினைவாற்றலில் திறமைபெற்றுள்ள தட்சண்யா, தற்போது நிகழ்த்தியுள்ள சாதனைகள், உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெறும் என்று அதன் நிர்வாகிகள் கூறியுள்ளனர். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க