வெளியிடப்பட்ட நேரம்: 15:45 (16/08/2018)

கடைசி தொடர்பு:15:45 (16/08/2018)

உயிருக்குப் போராடிய தேவாங்கு! காப்பாற்றிய மாணவன்

காரைக்குடி உடற்பயிற்சி மாணவர் ஒருவர் மனிதாபிமானத்தோடு உயிருக்குப் போராடிய தேவாங்கின் உயிரை உடனடியாக காப்பாற்றிய சம்பவம் பொதுமக்களை மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் சாலையில், காலையில் நடைப்பயிற்சி செல்லும் வழியில் தேவாங்கு ஒன்று அடிப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததைக் கண்ட மாணவன் ஜஸ்டின், உடனடியாக மருத்துவர் மணிவண்ணனுக்கு தகவல் கொடுத்தார். அவர் வந்து தேவாங்குக்கு முதலுதவி செய்து அதன் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.

இதுகுறித்து காடுகள் சம்பந்தமாக ஆய்வு நடத்தி வரும் டாக்டர். மணிவண்ணன் பேசும்போது, ``உயிருக்குப் போராடிய தேவாங்கை மாவட்ட வன அதிகாரியிடம் ஒப்படைத்தோம். அங்கு அதன் கண்ணில் காயம் ஏற்பட்டதைக் கண்டறிந்து முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடனடியாக அது இருந்த இடத்திலேயே கொண்டு போய் விட்டிருக்கிறார்கள் வன அதிகாரிகள். உடனடியாக விடவில்லையென்றால் அதனுடைய கூட்டத்தை இழந்து தவிக்கும். மேற்குத்தொடர்ச்சி மலைகளைவிட சமவெளிப்பகுதியில் வாழும் உயிரினம்தான் தேவாங்கு. இந்த இனம் அழிவின் விளிம்பில் இருக்கிறது. இந்த இனத்தைப் பாதுகாக்க  எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இரவில் மட்டுமே வாழும் இனம் தேவாங்கு. இந்த இனம் விவசாயிகள் நண்பன். இரவில் உலாவி வரும் பூச்சிகளை உண்ணும் தன்மை கொண்டது இது. இந்த இனம் சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டத்தில் அரிதாகவே காணப்படுகிறது. சமவெளிப் பகுதியில் தேவாங்குகளை ஒரே இடத்தில் பாதுகாத்தால் இந்த இனத்தைக் காப்பாற்ற முடியும். இதற்கிடையில் சமவெளிக்காடுகள் தொடர்ச்சியாக இருக்க வேண்டும்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க