வாஜ்பாய் மறைவு இந்திய நாட்டிற்கே ஏற்பட்ட பேரிழப்பு - திவாகரன் இரங்கல்!

'முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு, இந்திய நாட்டிற்கே ஏற்பட்ட பேரிழப்பு' என அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய்

முன்னாள் பிரதமரும் பா.ஜ.க மூத்த தலைவருமான வாஜ்பாய், வயது மூப்பின் காரணமாக நீண்ட காலமாக அரசியலில் இருந்து விலகி ஓய்வில் இருந்துவந்தார். அவருக்கு சிறுநீரகத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாகக் கடந்த ஜூன் 11-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, சிறுநீரகத் தொற்று உள்ளிட்ட பிரச்னைகளுக்கு சிகிச்சை எடுத்துவந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு வாஜ்பாய் மரணமடைந்தார். இதை எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது. வாஜ்பாய் உடல், டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 

வாஜ்பாய் மறைவுக்கு அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ வாஜ்பாய்  மறைவு இந்திய நாட்டிற்கே ஏற்பட்ட பேரிழப்பு. அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பங்கு அளப்பரியது. கார்கில் போரில் ஆப்பரேஷன் ‘கார்கில் விஜய் திவ’ என்ற செயல்பாட்டை நிகழ்த்தி, எதிரிகளை நிலைகுலையச் செய்தார். இது வரலாற்றில் எவராலும் மறக்க முடியாதது. அத்தகைய மிகப்பெரிய தலைவரின் இழப்பை மனம் ஏற்க மறுக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், பா.ஜ.க தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!