வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/08/2018)

கடைசி தொடர்பு:06:38 (17/08/2018)

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

மிழகத்தில, அடுத்த 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழை

இதர பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். சென்னையில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளது. நேற்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக வால்பாறையில் 310 மி.மீ மழையும் குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் பாபாநாசம், மணிமுத்தாற்றில் 60 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் பலமான காற்று தென்மேற்கு திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ முதல் 55-60 கி.மீ வேகத்தில் வீசும். தென் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில், தென்மேற்கு மற்றும் மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 35-45 கி.மீ முதல் 55-60 கி.மீ வேகத்தில் பலமான காற்று வீசும் என்பதால், மீனவர்கள் எச்சரிக்கையோடு இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.