நீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம் | Bhavani River Full Flow Near Kooduthurai

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (17/08/2018)

கடைசி தொடர்பு:10:20 (17/08/2018)

நீரில் மூழ்கிய வீடுகள் - பவானி கூடுதுறையில் வரலாறு காணாத தண்ணீர் வெளியேற்றம்

கூடுதுறையில் உள்ள பவானி ஆற்றில் வரலாறு காணாத தண்ணீர் வருவதால், அருகில் உள்ள வீடுகள் முற்றிலும் மூழ்கியுள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பவானி

தமிழகத்தில் பவானி, காவிரி மற்றும் அமிர்த நதி ஆகிய மூன்று நதிகளும் கூடும் இடம், 'தென்திரிவேணி சங்கமம்’ என்று அழைக்கப்படும் பவானி கூடுதுறை. ஈரோடு மாவட்டத்தில் பாயும் இந்த நதியில், தற்போது வரலாறு காணாத தண்ணீர் வெளியேறிவருகிறது. 

வெள்ளப்பெருக்கு

நதிக்கு அருகில் உள்ள சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள், முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. சுமார் 150-க்கும் மேற்பட்ட மக்கள், அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவு, உடை போன்ற வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால்,மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

தண்ணிர்

மேலும், கூடுதுறையில் உள்ள அமிர்த லிங்கேஷ்வரர் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால்,கோயிலுக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு தண்ணீர் தற்போது பவானி கூடுதுறையில் வருவதாகக் கூறுகிறார்கள்.