வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (17/08/2018)

கடைசி தொடர்பு:19:20 (17/08/2018)

கிராமத்துக்குள் புகுந்தது வெள்ளம்... ஆடு, மாடுகளுடன் தவிக்கும் மக்கள்

கொள்ளிடத்திலிருந்து வைப்பூர் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது. உடனடியாக வெளியேற மக்களுக்கு மாவட்டநிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், வெளியேற முடியாமல் மக்கள், கால்நடைகளுடன் தவித்துவருகின்றனர்.

 வைப்பூர் கிராமத்துக்குள் வெள்ளம் புகுந்தது

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் காவிரியில் 2 லட்சம் கன அடி  தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.  இதன் காரணமாக கொள்ளிடத்தில் தண்ணீர் நிரம்பிக் கரைபுரண்டு ஓடுகிறது. கொள்ளிடத்தில் தண்ணீர் அதிகளவில் சென்று  கொண்டுள்ளது. இனால் கரையோரத்தில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வைப்பூர் கிராம மக்கள்

இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடத்தையொட்டி உள்ள வைப்பூர் கிராமத்துக்கு அருகில் மருதையாற்றில் கொள்ளிடத் தண்ணீர் புகுந்தது. மருதையாற்றில் கரைகள் பலமாக இல்லாததால் மருதையாற்றில் புகுந்த தண்ணீர் கிராமத்துக்குள்  புகுந்தது. கிராமத்தில் பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடுவதால் பள்ளப்பகுதிகளில் கட்டப்பட்டிருந்த வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

வெள்ளத்தில் வைப்பூர் கிராம மக்கள்

இதனால் வீட்டிலிருந்து வெளியில்  வர  முடியாமல்  மக்கள்  தவித்து  வருகின்றனர். மேலும்,  தண்ணீரின் அளவு நேரத்துக்கு நேரம்  அதிகரித்து வருவதால் மேற்பகுதியில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் சூழும்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் கால்நடைகளை 
விட்டுவிட்டு எவ்வாறு வெளியேறுவது என்ற அச்சத்தில் உள்ளனர்.  இந்நிலையில்  கிராம  மக்களை  வெளியேற  உத்தரவிட்டுள்ளது  மாவட்ட நிர்வாகம். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளைச் செய்து வருகிறது.