மதகுகளில் கசிந்த காவிரி வெள்ளம்... மணல் மூட்டைகளால் அணை!

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் கட்டளைப் பகுதியில் சிறிய மதகுகளில் ஏற்பட்ட கசிவை மணல்மூட்டைகள் கொண்டு சரிசெய்யப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆட்சியர் ஆய்வு

கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் வட்டத்துக்குட்பட்ட கட்டளைப் பகுதயிலிருந்து வந்துகொண்டிருக்கும் நீரின் அளவு அதிகரித்துக்கொண்டே உள்ளது. நேற்று இரவு அதன் கரைப்பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிறிய மதகுகள் வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் செல்லும் நிலை ஏற்பட்டது. இதை அறிந்த கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் உள்ளுர் மக்களின் உதவியுடன், விடிய விடிய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு மணல் மூட்டைகளைக் கொண்டும், கூடுதல் மணலைக் கொண்டும் நீர்க்கசிவுப் பகுதிகளைச் சரிசெய்தனர்.

ஆட்சியர் ஆய்வு

இதனால் அருகில் உள்ள விவசாய நிலங்களில் நீர் கசியாமல் தடுக்கப்பட்டது. இப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் இன்று (17.08.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதிகளிலுள்ள விவசாய நிலங்களில் நீர் புகாமல் இருப்பதைக் கண்காணித்திடவும், அப்பகுதி மக்களைப் பாதுகாப்பாக தாழ்வான இடங்களிலிருந்து மேடான இடங்களுக்குக் கொண்டு செல்லவும், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை வழங்கினார். மேலும், இரவு முழுவதும் பணியாற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்த அனைத்துத் துறை அலுவலர்களையும் பாராட்டிய மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன், 'அப்பகுதியிலுள்ள மக்கள் யாரையும் ஆற்றில் குளிக்கவோ இறங்கவோ வேண்டாம்' என்றும் அறிவுறுத்தினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!