கேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு | Central government advises airlines to keep fares operating to and from kerala

வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (17/08/2018)

கடைசி தொடர்பு:21:00 (17/08/2018)

கேரளாவுக்கு இயக்கும் விமான கட்டணங்களை அதிகரிக்க கூடாது - மத்திய அரசு

கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தைப் பயன்படுத்தி, தனியார் விமான சேவை நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

கேரளா

கேரளாவில் வரலாறு காணாத மழை, வெள்ளப் பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போயுள்ளது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல எந்தவித போக்குவரத்து வசதியுமின்றி கேரள மக்கள் தத்தளித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களின் இந்தச் சூழலை சாதகமாகப் பயன்படுத்தி சில தனியார் விமான சேவை நிறுவனங்கள் பயணக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய புள்ளியல் துறை அமைச்சர், சதானந்தா கௌடா தனது ட்விட்டரில், `தனியார் விமான நிறுவனங்கள் இந்தச் சூழலில் கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பது வெட்கக் கேடானது' என்று தெரிவித்துள்ளார். விமான சேவை நிறுவனங்கள் உச்சபட்ச விமானக் கட்டணத்தை மீற வேண்டாம் என விமான போக்குவரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், விமான சேவை நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் சுரேஷ்பிரபு, `இதுபோன்ற பதற்றமான சூழலில் விமான நிறுவனங்கள் தங்கள் கட்டணத்தை உயர்த்தாமல் பார்த்துக்கொள்ளுமாறும், நிவாரணப் பொருள்களை இலவசமாக எடுத்துச் செல்லும் தமது ஆலோசனையை ஏற்றதற்கு நன்றி' எனவும் தெரிவித்துள்ளார்.


[X] Close

[X] Close