கேரள மக்களின் தாகம் தீர்க்க ரயில்களில் பயணிக்கும் 2.8 லட்சம் லிட்டர் குடிநீர்!

கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து 2.8 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குடிநீர்

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பியது. பாதுகாப்பு கருதி அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மழை மற்றும் அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட நீரால் கேரள மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. வரலாறு காணாத மழை, வெள்ளப் பாதிப்புகளால் பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில், கேரள மக்களின் குடிநீர் தேவைக்காக தெற்கு ரயில்வே சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து 2.8 லட்சம் லிட்டர் தண்ணீர் ரயில் மூலம் திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் இருந்து 7 வேகன்களிலும், சென்னை தண்டையார்பேட்டை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து 15 வேகன்களில் தண்ணீர் அனுப்பப்பட்டுள்ளது. பாட்டில்களில் நிரப்பப்பட்ட ரயில் நீர் 1320 மரப்பெட்டிகள் மூலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு ரயில்களில் பாலக்காடு மாவட்டத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!