சீமானுக்கு அடுத்த குறி வைக்கும் சென்னை போலீஸ்!  

சீமான் மீது வழக்கு பதிவு செய்ய உள்ள சென்னை போலீஸ்

சென்னை கொட்டிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது தொடர்பாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

 நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த மே மாதம் 18-ம் தேதி கொட்டிவாக்கத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் தடைச் செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். இதுதொடர்பாகத் தரமணி காவல் நிலையத்தில் சீமான் மீது நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் நடந்துள்ளன. `சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது, பொது மக்களிடையே பீதியை ஏற்படுத்தம் வகையில் பேசுவது, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுவது, தவறான வதந்திகளைப் பரப்பி பொது மக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது, சமூக வலைதளங்கள் மூலம் தவறான தகவல்களைப் பரப்புவது' ஆகிய பிரிவுகளின் கீழ் சீமான் மீது வழக்குகள் பதிவு செய்யப்படலாம் என்கின்றனர் போலீஸார்.

 இதுகுறித்து தரமணி போலீஸாரிடம் கேட்டதற்கு, ``பொதுக்கூட்டத்தில் சீமான் பேசியது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஆனால், இதுவரை சீமான் மீது எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படவில்லை" என்றனர். 

 நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் ஒருவரிடம் கேட்டதற்கு, ``சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதாக எங்களுக்கு எந்தவித தகவலும் வரவில்லை. அப்படியே வழக்கு பதிவு செய்தாலும் அதைச் சட்டப்படி சந்திப்போம்" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!